விநாயகர் வணக்கம்
கலை நிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவநின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக சரணம் சரணம்
சிலைமலை யுடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவரு மொருபரை சரணம் சரணம்
உமைசிவ அம்பிகை சரணம் சரணம்
அரஹர சிவசுத கணபதி சரணம்
அடியவர் வினை கெட அருள்பவ சரணம்
நினைபவர் பவமற நினைபவ சரணம்
நெடியவன் விழிதரு நெடியவ சரணம்
வலவையை மருவிய புயதர சரணம்
வடிவினி லுயரிய பெரியவ சரணம்
முறைதெரி மறையவ நிறையவ சரணம்
முடியடி தெரிவரு முதியவ சரணம்
சரணம் சரணம் கணபதி சரணம்
சரணம் சரணம் கஜமுக சரணம்
கணேசா சரணம்
கணேசா சரணம் சரணம் கணேசா (கணேசா)
2. கதியெனக் கருள்வாய் சரணம் கணேசா
கருணையின் வடிவே சரணம் கணேசா (கணேசா)
3. சங்கடம் தீர்ப்பாய் சரணம் கணேசா
சண்முக சோதரா சரணம் கணேசா (கணேசா)
4. சக்தியின் மைந்தா சரணம் கணேசா
சாஸ்தா சோதரா சரணம் கணேசா (கணேசா)
5. முதல்வனும் நீயே சரணம் கணேசா
முனிதொழும் தேவா சரணம் கணேசா (கணேசா)
6. அகந்தை அழிந்திடும் சரணம் கணேசா
அன்பில் உறைந்திடும் சரணம் கணேசா (கணேசா)
7. கரிமுகன் நீயே சரணம் கணேசா
கதியெனத் தொழுவோம் சரணம் கணேசா (கணேசா)
8. மூஷிக வாகனா சரணம் கணேசா
மோதக ஹஸ்தா சரணம் கணேசா (கணேசா)
9. பார்வதி பாலா சரணம் கணேசா
பாகவதப் பிரியா சரணம் கணேசா (கணேசா)
பிள்ளையார் துதி
1. பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
2. ஆற்றங்கரை மீதிலே அரசமரத்து நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
3. ஆனைமுகம் கொண்டவர் ஐந்து கரங்கள் உடையவர்
பானை வயிறு படைத்தவர் பக்தர் குறைத்தீர்த்தவர்
4. மஞ்சனிலே செய்யினும் மண்ணனாலே செய்யினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் ஆழ்த்தும் பிள்ளையார்
5. ஆறுமுக வேலனுக்கு அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் நீக்கி வைக்கும் பிள்ளையார்
6. அவல் பொரிக்கடலையும் அரிசிக் கொழுக்கட்டையும்
கவலை யின்றித் திண்ணுவார் கஷ்டங்களை போக்குவார்
7. கலியுகத்து விந்தையைக் காணவேண்டி அனுதினம்
எலியின் மீது ஏறியே இஷ்டம்போல் சுற்றுவார்.
தேவாரம்
பொ-ரை:ஞானமும், கல்வியும், நானறிந்த வித்தையும் பஞ்சாட்சரமே; நா கூறி வழிபடுவதும் அதனையே; நன்னெறி காட்டுவதும் அத்திருமந்திரமேயாகும்.
ஓது வார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.
பொ-ரை: உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர்பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக்கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாகவிளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின்திருநாமம் ‘நமச்சிவாய’ என்ற திருவைந்தெழுத்தாகும்.
நம்பு வாரவர் நாவி னவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது வொப்பது
செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சி வாயவே.
பொ-ரை: சிவபெருமானின் திருவடிகளையே பற்றுக் கோடாக நம்பும் பக்தர்கள் திருவைந்தெழுத்தைத் தங்கள் நாவினால் உச்சரித்தால், நறுமணம் கமழும் நாள்மலர்களில் உள்ள தேன்போல இனிமை பயப்பது, எல்லா உலகங்கட்கும் செம்பொன் திலகம் போன்றது நம்முடைய சிவபெருமானின் திருநாமமான ‘நமச்சிவாய’என்னும் திருவைந்தெழுத்தே ஆகும்.
புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்திட்டு,
ஐம் மேல் உந்தி,
அலமந்த போது ஆக, "அஞ்சேல்!" என்று அருள் செய்வான்
அமரும் கோயில்
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட, முழவு அதிர, மழை என்று
அஞ்சி,
சிலமந்தி அலமந்து, மரம் ஏறி, முகில் பார்க்கும் திரு ஐயாறே.
பொ-ரை: ஐம்புலன்களும் தத்தம் பொறிகளை விட்டு வழிமாறி அறிவழிந்து, கபம் மேற்பட மனம் சுழன்று வருந்தும் இறுதிக் காலத்து, ‘அஞ்சேல்‘ என்றுரைத்து அருள் செய்பவனாகிய சிவபிரான் அமரும் கோயிலை உடையது, நடனக்கலையில் வெற்றியுற்ற பெண்கள் நடனம் ஆட, அவ்வாடலுக்கேற்ற கூத்தொலிகளை எழுப்பும் முழவுகள் அதிர, அவற்றைக் கண்டு அஞ்சிய சிலமந்திகள் வானத்தில் கேட்கும் இடியோசை என்றஞ்சி மனம் சுழன்று மரங்களில் ஏறி மேகங்களைப் பார்க்கும் திருவையாறாகும்.
வேந்து ஆகி, விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும்
விகிர்தன் ஆகி,
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும்
கோயில்
காந்தாரம் இசை அமைத்துக் காரிகையார் பண் பாட, கவின் ஆர் வீதி,
"தேம்தாம்" என்று, அரங்கு ஏறிச் சேயிழையார் நடம் ஆடும்
திரு ஐயாறே.
பொ-ரை: அனைத்துலகங்களுக்கும் வேந்தனாய், விண்ணவர்களுக்கும், மண்ணவர்களுக்கும் வழி காட்டும் வள்ளலாய், மணங்கமழும் கொன்றை மாலையைச் சடையின்மிசை அணிந்தவனாய் புண்ணிய வடிவினனாய் விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது. மகளிர் காந்தாரப் பண்ணமைத்து இசைபாட அழகிய வீதிகளில் அமைந்த அரங்கங்களில் ஏறி அணிகலன்கள் பூண்ட இளம் பெண்கள் தேம், தாம் என்ற ஒலிக் குறிப்போடு நடனம் ஆடும் திருவையாறாகும்.
நின்று உலாம் நெடுவிசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும்
நீள்வாய் அம்பு
சென்று உலாம்படி தொட்ட சிலையாளி, மலையாளி, சேரும்
கோயில்
குன்று எலாம் குயில் கூவ, கொழும் பிரசமலர் பாய்ந்து வாசம்
மல்கு
தென்றலார் அடி வருட, செழுங் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே.
பொ-ரை: நீண்ட வானவெளியில் நின்று உலவி, தேவர்கள் வாழ்விடங்களை அழித்துவந்த முப்புரங்களையும், நீண்ட கூரிய அம்பு சென்று உலவும்படி கணை தொடுத்த வில்லாளியும், கயிலைமலை ஆளியுமாகிய சிவபிரான் சேர்ந்துறையும் கோயிலையுடையது, சிறுமலைகளில் குயில்கள் கூவவும், செழுமையான தேன் நிறைந்த மலர்களைத் தீண்டி மணம் மிகுந்து வருவதாகிய தென்றல் காற்று அடிவருடவும், அவற்றால் செழுமையான கரும்புகள் கண் வளரும் வளமுடைய திருவையாறாகும்.
நீரோடு கூவிளமும், நிலாமதியும், வெள் எருக்கும், நிறைந்த
கொன்றைத்
தாரோடு, தண்கரந்தை, சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும்
கோயில்
கார் ஓடி விசும்பு அளந்து, கடி நாறும் பொழில் அணைந்த கமழ்
தார் வீதித்
தேர் ஓடும் அரங்கு ஏறி, சேயிழையார் நடம் பயிலும் திரு ஐயாறே.
பொ-ரை: கங்கைநதி, வில்வம், பிறைமதி, வெள்ளெருக்கு, கொன்றை மலர் நிறைந்த மாலை, குளிர்ந்த கரந்தை ஆகியவற்றைச் சடையின்கண் அணிந்த தத்துவனாகிய சிவபிரான் தங்கியுள்ள கோயிலையுடையது, மேகமண்டலம் வரை உயர்ந்து சென்று வானத்தை அளந்து மணம் பரப்பும் பொழில்கள் சூழ்ந்ததும், மணம் வீசும் வீடுகளை உடைய தேரோடும் வீதிகளில் அரங்குகளில் ஏறி அணிகலன்கள் புனைந்த இளம் பெண்கள் நடனம் ஆடுவதுமாகிய திருவையாறாகும்.
பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து
காக்கை கேயிரை யாகிக் கழிவரே
பொ-ரை: பூக்களைக் கையிற்கொண்டு சிவபிரானின் பொன்னார் திருவடிகளைப் போற்றுதலில்லாதவர்களும், நாவினைக் கொண்டு இறைவன் திருநாமத்தை நவிலாதவர்களும் தத்தம் உடலுக்கே உணவுதேடிச் சுழன்று இறுதியில் காக்கைக்கே தாம் இரையாகி ஒழிவர்.
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.
பொ-ரை: தன்னை வாழ்த்துதற்கு வாயும், தன்னை நினைக்க அறிவற்ற நெஞ்சும், தன்னை வணங்கத் தலையும் தந்த தலைவனாகிய பெருமானை வண்டுகள் சூழ்ந்த மலர்களைத் தூவித்துதிக்காமல், வினையேன் நெடுங்காலம் வீழ்த்தியவாறு என்னே?
விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.
பொ-ரை: விறகில் தீப்போலவும், பாலிற்பொருந்திய நெய்போலவும், மாமணிச் சோதியானாகிய இறைவன் மறைய நின்றுளன்; உறவு என்னுங்கோலை நட்டு உணர்வு என்ற கயிற்றினால் முறுகவாங்கிக் கடைந்தால் முன்னின்று அருள் வழங்குவான்.

நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே. -அப்பர்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே. -அப்பர்
பொ-ரை:ஞானமும், கல்வியும், நானறிந்த வித்தையும் பஞ்சாட்சரமே; நா கூறி வழிபடுவதும் அதனையே; நன்னெறி காட்டுவதும் அத்திருமந்திரமேயாகும்.
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி